எஸ்.எஸ்.சி MTS (Non technical), ஹவல்தார் (CBIC & CBN) தேர்வுகளுக்கான விண்ணப்ப தேதியை நீட்டிக்குமாறு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) நடத்தும் MTS (Non technical), ஹவல்தார் (CBIC & CBN) தேர்வுகளுக்கு, ஜூன் 30-ஆம் தேதி முதல் ஜூலை 21-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக எஸ்.எஸ்.சி இணையதளத்தில் சர்வர் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் பலர் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், எஸ்.எஸ்.சி MTS (Non technical), ஹவல்தார் (CBIC & CBN) தேர்வுகளுக்கான விண்ணப்ப தேதியை நீட்டிக்குமாறு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக சு.வெங்கடேசன் கூறியதாவது, "ஸ்டாப் செலக்சன் கமிஷன் MTS (Non technical), ஹவல்தார் (CBIC & CBN) தேர்வுகளுக்கான கடைசி தேதி நேற்று முடிவடைந்துள்ளது. ஆனால் ஒரு வாரமாக இணையதள சர்வர் சரிவர இயங்காததால் பலரால் விண்ணப்பிக்க முடியவில்லை. எனவே விண்ணப்ப தேதியை நீட்டிக்குமாறு கோரியுள்ளேன்". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.