india

img

முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றது எப்படி?

பாஜக மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மக்களவை தொகுதியின் எம்.பி.யுமான ஓம் பிர்லா இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி  உறுப்பினர்கள் இடைநீக்கம், எதிர்க் கட்சி எம்.பி.க்கள் பேசும் பொழுது மைக் அணைப்பு, எம்.பி. க்களை மறைக்கும் சன்சாத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிகழ்வு என பல்வேறு சர்ச்சை களில் சிக்கிய ஓம் பிர்லா தற்போது  மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கி யுள்ளார். 

நாடு முழுவதும் நீட் உள்ளிட்ட மத்திய நுழைவுத்தேர்வுகளில் முறைகேடுகள் அரங்கேறியுள்ளது சிபிஐ விசாரணை மூலம் அம்பல மாகியுள்ள நிலையில், ஓம் பிர்லா வின் மகள் யுபிஎஸ்சி (சிவில் சர்  வீஸ்) தேர்வில் தேர்ச்சி பெற்ற விவ காரம் சந்தேகத்தை கிளப்பியுள் ளது. ஓம் பிர்லாவின் இரண்டாவது மகளான அஞ்சலி பிர்லா ஐஏஎஸ் அதிகாரி நிலையில் இந்திய ரயில்வே அமைச்சகத்தில் பணி யாற்றி வருகிறார். கடந்த வாரம், “அஞ்சலி பிர்லா யுபிஎஸ்சி தேர்  வில் வெற்றி பெறாமல் எப்படி ஐஏஎஸ் அதிகாரி ஆனார்? எப்படி  ரயில்வே அமைச்சகத்தில் வேலை  கிடைத்தது?” என சமூகவலைத் தளங்களிலும், இந்தி ஊடகங்களி லும் செய்தி வைரலாகி வந்தது. 

இதற்கு விளக்கம் அளித்த அஞ்  சலி பிர்லா,”தில்லியில் உள்ள ராம்ஜாஸ் கல்லூரியில் அரசியல் அறிவியல் (ஹானர்ஸ்) படித்த நான் 2019இல் யுபிஎஸ்சி பரிந்து ரைத்த 89 பேரில் தேர்வானேன். அது வும் முதல் முயற்சியிலேயே வெற்றி  பெற்றேன். நாட்டு மக்கள் மீதான எனது தந்தையின் அர்ப்பணிப்பை கண்டு, சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய சிவில் சர்வீசஸில் சேர  விரும்பினேன். பட்டயக் கணக்காள ரான எனது மூத்த சகோதரி அகன்ஷா தேர்வில் எனக்கு பெரி தும் உதவினார்” என பிடிஐ செய்தி  நிறுவனத்திடம் கடந்த செவ்வா யன்று கூறினார். 

அஞ்சலி பிர்லாவின் விளக்கத் திற்கு பிறகே அவர் யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்ற விவகாரம் கூடுதல் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. காரணம் யுபிஎஸ்சி என்பது மிக  கடினமான தேர்வாகும். இதில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்  தும் எளிதாக பதில் அளிக்க முடி யாதபடி இருக்கும். ஒவ்வொரு நாளும் 16 மணிநேர படிப்பு, கடின மான பயிற்சி இருந்தால் மட்டுமே  இந்த தேர்வில் களமிறங்க முடியும்.  யுபிஎஸ்சி தேர்வில் மொத்தம் 3  சுற்றுகள் உள்ளன. இதில் ஒரு  சுற்றில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த  சுற்றுக்கு தகுதி பெற முடி யும். ஒரு சுற்றில் தோல்வி கண்டால்  மீண்டும் முதல் சுற்றில் இருந்து வர  வேண்டும். ஆண்டுக்கணக்கில் இந்த தேர்வை பலமுறை எழுதி யும் தேர்ச்சி பெற முடியாமல் மீண்  டும் மீண்டும் முயற்சி செய்து வரும்  தேர்வாளர்கள் உள்ள நிலையில்,  மாடலிங் துறையில் உள்ள அஞ் சலி பிர்லாவால் எப்படி முதல் முயற்சியிலேயே திடீரென யுபி எஸ்சி தேர்வில் வெற்றி பெற முடிந்  தது என தொடர்ந்து அடுக்கடுக் கான கேள்விகள் எழுந்து வருகின்  றன.

ஒன்றிய பாஜக அரசு நடத்தும் அரசுத் தேர்வுகளில் முறைகேடு நடந்து வருவது அம்பலாமாகி வரும் நிலையில், பாஜகவை சேர்ந்த ஓம் பிர்லாவின் மகள் முதல்  முயற்சியில் கடினமான யுபிஎஸ்சி  தேர்வில் வெற்றி பெற்றதாக அறி விக்கப்பட்டு, பணியில் சேர்ந்தி ருப்பது குறித்து நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

;