india

img

கிரண்பேடியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

புதுதில்லி:
துணை நிலை ஆளுநருக்கான அதிகாரம் தொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர்கிரண் பேடி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு கோப்புகளை ஆய்வு செய்யமத்திய உள் துறை அமைச்சகம் வழங்கிய கூடுதல் அதிகாரத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஏப்ரல் 30 ஆம் தேதியன்று ரத்து செய்து உத்தரவிட்டது. இதனைஎதிர்த்து மத்திய அரசு, கிரண் பேடி ஆகியோர் தரப்பிலிருந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முயீடு செய்யப்பட்டது.

அதில், புதுச்சேரி நிர்வாகத்தில் உயர்நீதிமன்ற கிளை விதித்த உத்தரவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அமல்படுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வுமுன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை ஜூன் 21 ஆம் தேதிவரை அமல்படுத்த தடை விதிப்பதாகத் தெரிவித்தனர். ஜூன் 21ஆம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அந்தத் தடையை ஜூலை 10ஆம் தேதி வரை நீட்டித்தனர்.இந்நிலையில் ஜூலை 12 வெள்ளியன்று இந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே கூடுதல் அதிகாரம் எனவும், புதுச்சேரி அரசின் செயல்பாடுகளில் துணை நிலை ஆளுநர் தலையிடக் கூடாது என்றும் கூறிய நீதிபதிகள், கிரண்பேடியின் மனுவை தள்ளுபடி செய்தனர். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் மனுவையும் தள்ளுபடி செய்து, புதுச்சேரி அமைச்சரவை முடிவுகள் எடுக்க விதிக்கப்பட்ட தடையை
யும் நீதிபதிகள் நீக்கினர்.

;