“அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்வாகியுள்ள ஜோ பைடன் இந்தியாவுக்கு அந்நியர் அல்ல. துணைஜனாதிபதியாக இருந்தபோதே இந்தியாவுடன் அவர் நட்புறவில் இருந்தவர். எனவே, விட்ட இடத்திலிருந்தே மீண்டும் பயணத்தைத் தொடர் வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றுமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.