india

img

ஆசியாவிலேயே ஊழல் மலிந்த நாடு இந்தியாதான்... டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஆய்வு சொல்கிறது

புதுதில்லி:
லஞ்ச நாடுகளின் பட்டியலில், ஆசியாவிலேயே இந்தியாதான் முதலிடத்தில் இருப்பதாக‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ (Transparency International) என்ற அமைப்பு நடத்திய ஆய் வில் தெரிய வந்துள்ளது.

ஆசியாவிற்கான உலகளாவிய ஊழல் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு, 17 ஆசியநாடுகளில் சுமார் 20 ஆயிரம் பேரிடம் ஆய்வு ஒன்றை நடத்தி அதன்முடிவுகளை (Global Corruption Barometer – Asia 2020) தற்போது வெளியிட்டுள்ளது.இதில் ஆசியாவிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் தான் 89 சதவிகிதம் பேர் அரசாங்கத்தில் ஊழல் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது என்று கூறியுள்ளனர். இவ்வாறு கூறியவர்களில் 39 சதவிகிதம் பேர், பொதுச் சேவைகளைப் பெறுவதற்கு தாங்களே கடந்த 12 மாதங்களில் அரசாங்கஅதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத் ததாகக் கூறி உள்ளனர்.நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊழல் மிகுந்தவர்கள் என்று 32 சதவிகிதம் பொதுமக்களும், உள்ளாட்சி அதிகாரிகளே அதிக ஊழல் செய் கிறார்கள் என்று 30 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர்.ஜனாதிபதி அல்லது பிரதமர் அலுவலக ஊழியர்கள் ஊழல் நிறைந்தவர்கள் என்று26 சதவிகிதம் பேரும், மதத்தலைவர்கள் ஊழல் பேர்வழிகளாக இருக்கின்றனர் என்று14 சதவிகிதம் பேரும் குறிப்பிட் டுள்ளனர்.கடந்த 12 மாதங்களில் ஊழல்நிலைகளில் ஏதாவது மாற்றம்இருக்கிறதா என்ற கேள்விக்குமுன்பை விட ஊழல் அதிகரித் துள்ளதாக 47 சதவிகிதம் பேரும், குறைந்திருப்பதாக 27 சதவிகிதம் பேரும் முந்தையநிலை அப்படியே தொடருவதாக 23 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர்.அரசு அதிகார மட்டங்களில்இருக்கும் லஞ்ச ஊழல் முறைகேடுகளைப் பொறுத்தவரை, இந்திய (39 சதவிகிதம்)நாட்டிற்கு அடுத்தடுத்த இடங்களை கம்போடியா (37 சதவிகிதம்), இந்தோனேசியா (30 சதவிகிதம்), தென்கொரியா (10 சதவிகிதம்), ஜப்பான் (3 சதவிகிதம்), மாலத்தீவு (2 சதவிகிதம்) ஆகியஆசிய நாடுகள் இடம்பிடித்துள் ளன.

;