india

img

பிரதமர் மோடி திறந்து வைத்த விமான நிலையங்களும்... சேதங்களும்...

ஜபல்பூர் - மத்தியப்பிரதேசம்

பாஜக ஆளும் மத்தி யப்பிரதேச மாநிலத் தின் ஜபல்பூரில் ரூ.430 கோடி செலவில் கட்டப்பட்ட தும்னா விமான நிலையத்தை பிரத மர் மோடி கடந்த மார்ச் 10, 2024 அன்று திறந்து வைத்தார். இந்த விமான நிலையம் திறக்கப்பட்டு 4 மாதங்கள் கூட ஆகாத நிலை யில், கடந்த வியாழனன்று (ஜூன் 27) பெய்த சாதாரண மழைக்கு விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வருமான வரித்துறை ஆணையர் லேசான காயங்களுடன் தப்பித் தார். மோடி அரசின் ஊழல் திட்ட செயல்பாடுகளால் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின் றன என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

குஜராத் - ராஜ்கோட்

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜ ராத் மாநிலத்தின் ராஜ்கோட் பகுதியில் ரூ.1,400 கோடி செலவில் கட்டப்பட்ட விமான நிலையத்தை பிரத மர் மோடி 2023 ஜூலை 27 அன்று திறந்து வைத்தார். கடந்த வெள்ளியன்று இரவு (ஜூன் 28) பெய்த கனமழையில் ராஜ்கோட் சர்வதேச விமான நிலை யத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. பயணிகளை கால் டாக்சிகள் இறக்கி, ஏற்றும் இடத்தில் இந்த விபத்து அரங்கேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் இதுவரை யாரும் காயமடையவில்லை என தகவல்கள் வெளி யாகியுள்ளன.

தில்லி 

தில்லியில் வெள்ளியன்று அதிகாலை வரை பெய்த மழையில் விமான நிலை யத்தின் டெர்மினல் 1இன் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரி ழந்த நிலையில், இடிந்து விழுந்த டெர்மினல் -ஐயும் பிரதமர் மோடி திறந்து வைத்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பலநூறு கோடி செலவில் கட்டப் பட்ட விமான நிலையத் தின் டெர்மினல் 1 பகுதியை பிரதமர் மோடி 2024  மார்ச் 10 அன்று திறந்து வைத்தார் என காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத் தில் கூறியுள்ளது.

பிரதமர் மோடி திறந்து வைத்த ராமர் கோவில், விமான நிலையங்கள், பாலங்கள், சுரங்கப் பாதைகள், சாலைகள் என அனைத்தும் ஒரு வருடத்திற்கு கூட தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து சேதமடைவது ஏன் என நாடு முழுவதும்  அனைத்து தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மோடி அரசு பாஜக ஊழலில் ஊறிவிட்டதால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன என காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட  “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.


 

;