india

img

பாஜக ஆளும் மாநிலங்களில் ரூ.302 கோடி போதைப்பொருள் பறிமுதல்

மோடி பிரதமர் ஆன பின்பு கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் போதைப்பொருள் புழக்  கம் மிக மோசமான அளவில் அதி கரித்துள்ளது. குறிப்பாக மோடி யின் நெருங்கிய நண்பரான அதானி கையில் துறைமுகங்கள் சென்ற பின், பாஜக ஆளும் மாநி லங்கள் போதைப்பொருள் கூடார மாக மாறியுள்ளன.

இந்நிலையில், கடந்த மே 15  அன்று பாஜக கூட்டணி ஆட்சி  நடைபெற்று வரும் மகாராஷ் டிரா மாநிலத்தின் தானே மாவட்  டத்திற்கு அருகே செனாகான் என்ற இடத்தில் ரூ.2 கோடி மதிப்  புள்ள மேபட்ரான் போதைப் பொருளை பறிமுதல் செய்த இரு வரை அம்மாநில குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான விசாரணையில் மகா ராஷ்டிரா, உத்தப்பிரதேசம், குஜ ராத் உள்ளிட்ட இடங்களில் மிகப்  பெரிய போதைப்பொருள் நெட் ஒர்க் இயங்கி வருவதாக தகவல் வெளியானது. இதை அடுத்து மகாராஷ்டிரா போலீசார் வியாழ னன்று சோதனையை தீவிரப் படுத்தினர்.

பிரதமர் மோடியின் தொகுதியில்...

பிரதமர் மோடியின் தொகுதி யான உத்தரப்பிரதேச மாநிலத் தின் வாரணாசி, ஜான்பூர் ஆகிய  இடங்களில் நடைபெற்ற சோத னையில் 71 கிராம் போதைப் பொருள் மற்றும் 300 கிலோ மூலப்  பொருட்கள் என ரூ.200 கோடிக் கும் அதிகமான மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இதே போல மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு இடங்க ளில் ரூ.15 கோடி அளவில் போதைப்பொருளும், குஜராத்  மாநிலத்தில் ரூ.16.80 லட்சம் அள விலான போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்து டன், குஜராத், மகாராஷ்டிரா, உத்  தரப்பிரதேசத்தில் 12 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். 

தெலுங்கானாவிலும்...

தென்னிந்திய மாநிலமான தெலுங்கானாவின் நசரா போரில் உள்ள தொழிற்சாலையில் 103 கிராம் போதைப் பொருளும், ரூ. 25 கோடி மதிப்புள்ள மூலப் பொருட்களும் சிக்கின. இது தொடர்பாக 3 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர். 

ஒரே நாளில் நாடுமுழுவதும் ரூ.327 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியதும்,  15 பேர் கைது செய்யப்பட்டுள்ள தும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

 

;