india

img

ஐசிசி விருது: சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி தேர்வு

சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
கடந்த  பத்து ஆண்டுகளின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த டி20 வீரர், ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது என வெவ்வேறு பிரிவுகளில் விருதுகள் கொடுக்கப்பட உள்ளது. அதற்கான பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
அதன்படி, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சிறந்த கிரிக்கெட் வீரராகவும், சிறந்த ஒருநாள் வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷீத் கான் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
மேலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருதும் கொடுக்கப்பட்டுள்ளது. 
மகளிர் கிரிக்கெட்டில் கடந்த 10 ஆண்டின் சிறந்த வீராங்கனையாக ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டர் எலிசி பெரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

;