india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி சொத்துகள் முடக்கம்

“இந்தியா” கூட்டணி யில் அங்கம் வகிக் கும் ஜேஎம்எம்  கட்சியின் தலைவரும், ஜார்க்  கண்ட் முன்னாள் முதல்வரு மான ஹேமந்த் சோரன் முதல்  வராக இருந்த பொழுதே நில மோசடி வழக்குத் தொடர் பாக ஜனவரி 31 அன்று அம லாக்கத்துறையால் கைது  செய்யப்பட்டார். தற்போது ராஞ்சியில் உள்ள முண்டா  சிறையில் அடைக்கப்பட் டுள்ள நிலையில், வியாழ னன்று ஹேமந்த் சோரன் உட்பட 5 பேர் மீது சிறப்பு  நீதிமன்றத்தில் அமலாக்கத்  துறை குற்றப்பத்திரிக்கை யை தாக்கல் செய்தது.

இதையடுத்து, வெள்ளி யன்று ஹேமந்த் சோர னுக்குச் சொந்தமான ரூ. 31  கோடி மதிப்புள்ள சொத்து களை அமலாக்கத்துறை முடக்கியது. முடக்கப்பட்ட சொத்துக்கும் தனக்கும் எந்த  சம்பந்தமும் இல்லை என  ஹேமந்த் சோரன் தனது  வாக்குமூலத்தில் கூறியதன்  காரணமாகவே சொத்துக் களை முடக்கினோம் என  அமலாக்கத்துறை தெரிவித் துள்ளது.

பாட்னா
“இந்தியா” கூட்டணியில் விகாஷீல் இன்சான் கட்சி

பீகார் மாநிலத்தின் பிராந்  திய கட்சியான விகா ஷீல் இன்சான் கட்சி யின் தலைவராக பாலிவுட் ஆடை மற்றும் சிகை அலங்  கார நிபுணரான முகேஷ் சஹானி உள்ளார். பாஜக வின் மிக நெருங்கிய கூட் டாளியான  விகாஷீல் இன்  சான் கட்சி கருத்து வேறு பாட்டால் “இந்தியா” கூட்ட ணியில் இணைவதாக அறி வித்துள்ளது. 

மீனவ சமூகங்கள் சார்ந்த 20 தனி அமைப்புகளை கட்சி யாக கொண்ட இந்த விகா ஷீல் இன்சான் கட்சிக்கு ராஷ்ட்ரிய ஜனதாதளம் (ஆர்ஜேடி) தனது 26 தொகு தியில் இருந்து 3 தொகுதிகள்  தரவுள்ளதாக அறிவித்துள் ளது. போட்டியிடும் இடங்  கள் விரைவில் அறிவிக்கப் படும் என ஆர்ஜேடி தலை வர் தேஜஸ்வி அறிவித்துள் ளார். 

“இந்தியா” கூட்டணியில் இணைந்த பின்பு முகேஷ்  சஹானி செய்தியாளர்களி டம் கூறுகையில்,”ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு  பிரசாத்தின் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். ஆனால் கூட்டணியில் இருந்து கொண்டே பாஜக,  எங்கள் கட்சியை வேட்டை யாடி, ஒழிக்க முயற்சித்து வருகிறது. அதனால்தான் கட்சியையும், நாட்டை யும் காப்பாற்ற “இந்தியா”  கூட்டணியில் இணைத்துள் ளோம் என முகேஷ் சஹானி  கூறினார்.