india

img

நூறு வயது கடந்த கவுரியம்மா

திருவனந்தபுரம், ஜுன் 20- நூறு வயதை கடந்துள்ள கேரளத்தின் புரட்சி நாயகி கே.ஆர்.கவுரியம்மாவுக்கு கேரள சட்டமன்றம் புகழாரம் சூட்டியது. கேள்வி பதில் நேரம் முடிந்த உடன் சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் ஒரு குறிப்பின் மூலம் சட்டப்பேரவையின் கவனத்திற்கு கொண்டுவந்தார். ஆலப்புழாயில் வெள்ளியன்று நடக்கும் அவரது பிறந்தநாள் விழாவுக்காக சட்டமன்றத்திற்கு சிறப்பு விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

“ போராட்டங்களின் வீரியத்தில் தாயாக, மலையாளக்கரையில் மாற்றத்தின் வழிதிறக்க கனல்வழிகள் ஏற்ற வீரப்பெண் கேரளத்தின் கவுரியம்மாவுக்கு நூறு நிறைவுற்றது காலம் பாதுகாத்த முன்விதிகளை தூக்கியெறிந்து, வரலாற்றில் தலையீடு செய்து முன் சென்ற கவுரியம்மா, இன்று உயிர் வாழ்கிறார். முதல் சட்டமன்றத்தில் உறுப்பினரான ஒரே எம்எல்ஏ அவர்தான். புரட்சியின் கனலாய் தளிர்த்த பூமரம் என்று போற்றப்பட்ட கவுரியம்மாவுக்கு வந்தனம்” ….என சட்டமன்றத்தில் சபாநாயகர் குறிப்பிட்டார்.

முதல்வர் பினராயி விஜயனும் கவுரியம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். வெள்ளியன்று (ஜுன் 21)ஆலப்புழையில் நடைபெறும் பிறந்தநாள் விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேங்க வசதியாக அன்றைய தினம் சட்டமன்றம் நடைபெறாது எனவும் முடிவு செய்யப்பட்டது.

;