india

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

ஆசிய நாடுகளில் கோவிட் 19 தொற்று மரணங்களில்  இந்தியா முதலிடம். பொருளாதார வீழ்ச்சியிலும் இந்தியா முதலிடம். இதைத்தான் இரண்டாவது நிதி காலாண்டுதரவுகள் வெளியிடப்பட்டபோது நாம் கூறினோம்.

                              *******************

மோடி அரசாங்கத்தின் கீழ் இந்தியாவின் வீழ்ச்சியும் சோகமும் மேலும் பன்மடங்கு கூடியுள்ளது.  நேரடி நிதி உதவியும் இலவச உணவு தானியங்கள் தருவது மட்டும்தான் ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கு பாதுகாப்பு தர முடியும். தானடித்த மூப்பாக உள்ள மோடி அரசாங்கத்தை இதனை செய்ய வைக்க நிர்ப்பந்தம் தரும் அளவுக்கு மக்கள் இயக்கம் உருவாக வேண்டும்.

                              *******************

ஏற்றுமதியில் வீழ்ச்சி! பணவீக்கம் ஏறுமுகம்! இதன் காரணமாக இந்தியா மற்றும் வளரும் தேசங்களுக்கிடையே இருந்த இடைவெளி இந்தியாவுக்கு பாதகமாக அதிகரித்துள்ளது. ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக சீர்குலைந்துள்ளது. இந்த அரசாங்கத்தின் பொய்களை பரப்பும் செயலும் வாயால் வடை சுடுவதும் அம்பலமாகி வருகிறது.

                              *******************

பொதுமக்களிடம் பொய்யான கருத்தாக்கத்தை உருவாக்குவதற்காக பிரச்சாரம் செய்யப்பட்ட ஒவ்வொரு பிரச்சனையை போலவே “மேக் இன் இந்தியா” என்பதும் மிகப்பெரிய தோல்வி!  இந்த அரசாங்கத்திற்கு கவலையும் இல்லை; ஆர்வமுமில்லை. பொருளாதாரத்தை மீட்பது தொடர்பான கருத்துக்களில் இந்த அரசாங்கம் திவால் ஆகி உள்ளது.

                              *******************

கேரளாவில் மக்கள் நலத் திட்டங்களை அமலாக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தை சீர்குலைக்க மோடி அரசாங்கம் மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது. இது அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளை சிதைக்கும். தங்களது அரசியல் உள்நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள இத்தகைய முயற்சிகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. பா.ஜ.க.வும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் ஒரே அலைவரிசையில் செயல்படுகின்ற இத்தகைய கயமைத்தனத்துக்கு கேரளா மக்கள் சரியான பதிலடியை தருவார்கள்.

;