இந்திய-மியான்மர் எல்லையில் வேலி அமைக்கவிருக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்க்க மணிப்பூர் பழங்குடியின அமைப்பு முடிவு செய்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதி ரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை சந்தித்தது.
உத்தரகண்ட் சில்க்யாரா பகுதியில் சுரங்கப் பாதை விபத்து நடந்து 76 நாட்களுக்கு பின் மீண்டும் சுரங்கப்பணி தொடக்கப்பட்டதாக ஒன்றிய அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தில்லியின் கல்காஜி கோவிலில் பக்தர்கள் அமர்வதற்காக மேடை சரிந்து விழுந்ததில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், 17 பேர் காயம டைந்தனர்
. உத்தரப்பிரதேசம் கான்பூரில் உள்ள ராம் ஜானகி கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.
ஹரியானாவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி யிடும் என அக்கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரி வால் அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பரித்பூரில் உள்ள வாடகை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர்.
ராஜஸ்தான் மாநில பாஜக அரசு பிப்.15 அன்று மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் சூரிய நமஸ்காரம் கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது.
கடந்த 10 மாதங்களில் 75,000 காப்புரிமைகள் வழங்கி இந்திய காப்புரிமை அலுவலகம் சாதனை படைத்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
நாட்டின் இயற்கை எரிவாயு தேவை நடப் பாண்டில் 6 சதவீதமாக உயரும் என்றும், மின் உற்பத்தி துறை மற்றும் உர தொழிற்சாலை களில் எரிவாயு தேவை அதிகரிப்பால், நடப் பாண்டுக்கான எல்என்ஜி இறக்குமதி 7 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் சர்வதேச ஆற்றல் முகமை தெரிவித்துள்ளது.
சுரங்க மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்து 8-ஆவது முறையாக சம்மன் அனுப்பியுள்ள நிலையில், முன்னறிவிப்பின்றி ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் திடீரென தில்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்தப் பய ணம் இது அலுவல்ரீதியிலான பயணம் இல்லை என்றும், வழக்கு குறித்து சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்காக ஹேமந்த் சோரன் தில்லி சென்ற தாக ஹேமந்த் சோரனின் உதவியாளர் கூறியதாக அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழு மலையான் கோவிலில் பக்தர்கள் அதி களவில் திரண்டுள்ளனர். குறிப்பாக வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. அறைக்கு வெளியே கிருஷ்ண தேஜா கெஸ்ட் அவுஸ் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்தி ருக்கின்றனர். இவர்கள் அனைவரும் கடும் குளிரில் அடுத்த 24 மணி நேரம் காத்திருந்துதான் தரிசனம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.