மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகும் மோடி தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. ஒரு நாடக நடிகரை போல தனது நடை ,உடை பாவனையை காட்டுகிறார். இந்திய அரசியல் சாசனத்தை தூக்கி முத்தமிட்டு, சிறந்த வேடத்தை போடுகிறார். அதிமுகவோடு கூட்டணியில் இருந்ததால் தான் பாஜக ஒரளவு தமிழக மக்களுக்கு தெரிந்திருக்கிறது. தமிழகத்தில் என்றென்றும் பாஜக காலூன்றவே முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் எம்எல்ஏ மதுரையில் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் கூறினார்.