india

img

12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நாளை தொடங்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கோவா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவு ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நாளை தொடங்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், படிவங்கள் அச்சடிப்பு மற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சி ஆகியவை அக்டோபர் 28-ஆம் தேதி முதல் நவம்பர் 3-ஆம் தேதி  வரையிலும், வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நவம்பர் 4-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரியிலும் நடைபெறுகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் வரும் டிசம்பர் 9-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஆட்சேபனை தெரிவிக்கவும், திருத்தங்கள் கோரவும் டிசம்பர் 9-ஆம் தேதி முதல் 20126 ஜனவரி 8-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்களின் புகார்கள் சரிபார்ப்பு பணிகள் டிசம்பர் 9-ஆம் தேதி முதல் 2026 ஜனவரி 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.