india

img

குழந்தைகளை பிணைக் கைதிகளாக அடைத்து வைத்தவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை!

மும்பையில் 17 குழந்தைகளைப் பிணைக் கைதிகளாக அடைத்து வைத்திருந்தவர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மும்பையில் உள்ள ஆர்ஏ ஸ்டூடியோஸில் பணிபுரியும் ரோஹித் ஆர்யா என்பவர் விளம்பர படத்திற்குக் குழந்தைகளுக்கு வாய்ப்பளிப்பதாக அறிவித்துள்ளார். இதை நம்பி பெற்றோர்களும் குழந்தைகளை அழைத்துவந்துள்ளனர்.
மொத்தம் 17 குழந்தைகள் அங்கு வந்துள்ளனர். குழந்தைகள் அனைவரும் அறைக்குள் நுழைந்தவுடன் அறையின் கதவைச் சாத்திய ரோஹித் ஆர்யா ஒரு சிலரிடம் பேசவேண்டும் எனவும் இல்லையென்றால் குழந்தைகளை தீ வைத்துக் கொன்றுவிடுவதாகவும் காவல்துறையினருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
உடனே சுதாரித்த போலீசார் அறையின் பின் புறமாகச் சென்று ஆர்யாவைச் சுட்டுப் பிடித்து குழந்தைகளை மீட்டுள்ளனர்.பின்னர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் ஆர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.