தபால் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்படாமல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVMs) பதிவான வாக்குகளின் அனைத்துச் சுற்றுகளும் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே அஞ்சல் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. பீகார் தேர்தல் நெருங்கும் இந்த வேளையில், வாக்கு எண்ணிக்கையில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் கடைசி சுற்று எண்ணிக்கை நடைபெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை குறித்து சுற்றறிக்கை அனைத்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.