“ஜூன் 4-க்குப் பிறகு, பாஜகவை ஒரு நாள் ஆட்சி செய்ய விட்டாலும், சுயமரியாதை, நல்லிணக்கம், சமத்துவம் என்பதெல்லாம் அழிந்துவிடும். பாசிச பாஜகவின் இலக்கே இதுதான். இந்த தேர்தலில் நல்லவர்கள், வல்லவர்கள் என்பதைத் தாண்டி தவறானவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது. இதனைக் கருத்தில் கொண்டு நாம் வாக்களிக்க வேண்டும்” என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.