india

img

ஜேஎன்யு துணைவேந்தரை டிஸ்மிஸ் செய்க: சீத்தாராம் யெச்சூரி

புதுதில்லி:
ஜேஎன்யு துணை வேந்தர் நீக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.ஜேஎன்யு துணைவேந்தரை நீக்கக்கோரி, ஜேஎன்யு மாணவர்கள்-ஆசிரியர்கள் வியாழன் அன்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அந்த ஆர்ப்பாட்டத்தை வாழ்த்திப் பேசிய சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:துணை வேந்தர் ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்த நபர் நீக்கப்பட வேண்டும். சுமார் மூன்று மணி நேரம் வளாகத்திற்குள் குண்டர்கள் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட அவர் அனுமதித்திருக்கிறார். வெளியில் போலீசார் நின்றிருந்தும் அவர்களைத் தடுத்திட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அனைத்தும் முடிந்தபின்னர்தான் அவர்கள் உள்ளே வர அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இதிலிருந்து நடந்துள்ள வன்முறை வெறியாட்டங்களுக்கு துணை வேந்தரும் உடந்தையாக இருந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது என்று கூறினார்.

கன்னையா குமார்
ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னையா குமார் பேசுகையில், துணை வேந்தர் உடனடியாக நீக்கப்படவேண்டும். பல ஆசிரியர்களும், மாணவர்களும் மிகவும் கொடூரமான முறையில் காயங்கள் அடைந்திருந்தபோதிலும், அந்த நபர் இதுவரை ஒருவரைக்கூட வந்து விசாரித்திடவில்லை. இதிலிருந்தே இந்தச் சம்பவம் அவர்களின் அரசியல் நிகழ்ச்சிநிரலின் ஒரு பகுதி என்பதும் இதற்காகத்தான் அவர் துணை வேந்தராக வந்திருக்கிறார் என்பதும் நன்கு தெரிகிறது என்று கூறினார்.

;