india

img

தேனா வங்கி தலைமையகம் ரூ. 530 கோடிக்கு விற்பனை

பாங்க் ஆப் பரோடா திட்டம்


புதுதில்லி, செப்.14- தேனா கார்ப்பரேட் சென்டர் என்று அறியப்படும் பந்த்ரா குர்லா காம்ப்ளெஸ் கட்டடம் மும்பையில் அமைந்துள்ளது. இந்த 9953.73 சதுர மீட்டர் கட்டிடம் 2878.36 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு இருப்பதாகும். தேனா வங்கியின் தலைமை அலுவலக மாக இது செயல்பட்டு வந்தது. இதனிடையே கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பரில், தேனா வங்கியும், விஜயா வங்கியும், பாங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டதால், இந்த கட்டடம் பாங்க்ஆப் பரோடா வங்கி நிர்வாகத்தின் கீழ் சென்றது. இந்நிலையில், தேனா வங்கியின் மும்பை தலைமை அலுவலகத்தை விற்பனை செய்ய, பாங்க் ஆப் பரோடா திட்டமிட்டுள் ளது. அக்டோபர் 18-ஆம் தேதி ஆன்லைனில் இதற்கான ஏலம் நடைபெறும் என்று பாங்க் ஆப் பரோடா அறிவித்துள்ளது. ஆரம்ப விலை 530 கோடி ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

;