india

img

தில்லி போலீசார் நடத்திய ரெய்டு தொடர்பாக சீத்தாராம் யெச்சூரி விளக்கம்!

தில்லியில் உள்ள தனது வீட்டில் சிறப்புப் பிரிவு போலீசார் நடத்திய சோதனை குறித்து சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி விளக்கமளித்துள்ளார்.
தில்லியில் ‘நியூஸ்கிளிக்’ செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள், அவர்களுடன் தொடர்புடைய நபர்களின் வீடுகள் என 30 இடங்களில் தில்லி சிறப்புப் பிரிவு போலீசார் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதை அடுத்து, சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வீட்டிலும் சோதனை நடைபெறுவதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், ரெய்டு தொடர்பாக சீத்தாராம் யெச்சூரி விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
"தில்லியில் என்னுடன் வசிக்கும் சிபிஎம் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு தோழரின் மகன் நியூஸ் க்ளிக் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரிடம் விசாரணை மேற்கொள்ள போலீசார் என் வீட்டிற்கு வந்தனர். அவரது லேப்டாப் மற்றும் செல்போனை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். 
எதற்காக இந்த ரெய்டு, என்ன குற்றச்சாட்டு என்பது யாருக்கும் தெரியாது. இது ஊடகங்களின் குரலை ஒடுக்கும் முயற்சி. ரெய்டு நடத்தப்படுவதற்கான காரணத்தை நாட்டு மக்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

;