india

img

பிரிஜ் பூஷன் மீதான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

பாஜக எம்.பி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் தில்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அதேபோல், பிரிஜ் பூஷண் மீது சிறுமியின் தந்தை அளித்த பாலியல் புகாருக்கு அடிப்படை ஆதாரம் கிடைக்கவில்லை என தெரிவித்து பிரிஜ் பூஷன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய கோரி தில்லி போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.