கடன் கொடுக்கும் செயலிகளாக அறிமுகமாகி மக்களை உளவுபார்த்து அதன்பின் பணம் பறிக்கும் மிரட்டல் செயலிகளாக மாறு வதாக கடன் செயலிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டு கள் உள்ள நிலையில், 18 செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர் அதிரடியாக நீக்கு வதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கூகுள் கூறுகையில்,”ஏஏ கிரெடிட், அமோர் கேஷ், ஈஸி கிரெடிட், காஷ்வாவ், கிரெடிபஸ், பிளா ஷ்லோன், கோ கிரெடிடோ, பின்னப் லென்டிங், 4 எஸ் கேஷ், ட்ரூநய்ரா, ஈஸி கேஷ் உள்ளிட்ட 18 செயலிகள் நீக்கப் படுவதாகவும், இந்த 18 செயலிகளை யாரேனும் பதி விறக்கம் செய்திருந்தால் அவற்றை அவர்களே தாங் களாக நீக்க வேண்டும்” என வலியறுத்தியுள்ளது.
அப்டேட்களுடன் மீண்டும் முளைக்கும் நீக்கப்பட்ட செயலிகள்
கடன் செயலிகள் பொது வாக இந்தியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாட்டு மக்களை குறிவைத்தே இயங் கிவருகின்றன. மிரட்டல் விடுக்கும் கடன் செயலிகள் தொடர்பாக ஏற்கெனவே 17 செயலிகள் முற்றிலும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப் பட்டுவிட்டன. ஒன்று மட்டும் புதிய அப்டேட்டுகளுடன் மீண்டும் முளைத்து உளவு பார்க்கும் வசதி இல்லாமல் மீண்டும் கூகுள் பிளே ஸ்டோ ரில் உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கூகுள் மீண்டும் மொத்தமாக 18 செயலிகளை நீக்கி யுள்ளது என தகவல் வெளியாகி யுள்ளது.
கடன் செயலிகளின் மிரட்டல் எப்படி?
கடன் செயலிகள் தொடக்கத்தில் கவர்ச்சி கரமான விளம்பரத்தை சமூகவலைத் தளங்களில் வெளியிடும். குறைந்த வட்டியில் அதிக கடன் என்பதை நம்பி ஸ்மார்ட்போன் பயனர்கள் கூகுளில் இருந்து தரவிறக்கம் செய்து கடனுக்கு விண்ணப்பிப்பார்கள். விண்ணப்பத்தில் ஆதார், பான் கார்டு, மொபைல் எண், வங்கி விபரம் கேட்கப்படும் நிலையில், விண்ணப்பிக்கும் நபர்களின் தகவல்களைப் பெற்று மேலும் உளவு வேலை கள் மூலம் கடன் செயலிகள் களமிறங்கி குறிப்பிட்ட தொகையை கொடுக்கும். பின்னர் அதிக வட்டியை உயர்த்தி அதிக பணத்தை கேட்கும். கடன் வாங்கிய பயனர் பணத்தை தரவில்லை என்றால், உளவுபார்த்த தக வல்களை குறிப்பிட்டு சில புகைப்படங்களை அனுப்பி, உங்கள் செல்போனிலிருக்கும் காண்டாக்ட் எண்களுக்கு அனுப்புவோம் என மிரட்டல் விடுக்கும். இதுதான் கடன் செயலிகளின் வேலை ஆகும். தைரியமானவர்கள் காவல்துறை மூலம் பிரச்சனையை சரி செய்துள்ளனர். எதுவும் அறியாதவர்கள் பணத்தை இழந்துள்ளனர்.