india

img

தில்லி முழுவதும் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தில்லியில் காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் உள்ளிட்டவைகளின் விலை ஜெட் வேகத்தில் எகிறியுள்ளது. இதனை கண்டித்தும் ரேஷன் விநியோக முறையின் மூலம் ஏழைகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. பொதுமக்களும் பங்குபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசின் முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராகவும், விலைவாசி உயர்வை கண்டுகொள்ளாமல் இருக்கும் ஆம் ஆத்மி அரசின் செயல்பாட்டிற்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பி, உருவ பொம்மை எரிப்பு போராட்டமும் நடைபெற்றது.