மேற்குவங்க மாநிலத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூலை 10 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தெற்கு ரனாகாத் (எஸ்சி) சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக களமிறங்கியுள்ள அரிந்தம் பிஸ்வாஸ் எளிமையான மக்கள் சந்திப்பு இயக்கம் மூலம் வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொண்டார்.