india

img

கொரோனா தாக்குதலைத் தொடரும்

வெட்டுக்கிளிகள் அபாயம்

கொரோனோ தாக்குதலுக்குப் பின் கோடைகாலத்தில்  வெட்டுக்கிளிகளின் தாக்குதல் இந்தியாவில் பயங்கரமாக இருக்கும்  எனத் தெரிகிறது. இந்தச் சவாலையும் எதிர்கொள்ள வேண்டிய  தேவை உள்ளது.

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், கோடை காலத்தில் நிகழவுள்ள இயற்கை பேரழிவுகளுக்கு இந்தியா பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆப்பிரிக்காவிலிருந்து புறப்படும் ஒரு மாபெரும் வெட்டுக்கிளி புயல் தெற்காசியாவில் உள்ள விவசாய நிலங்களைத் தாக்கும் என்று அஞ்சப்படுகிறது. குறிப்பாக விவசாயப் பண்ணைகள் மீது தாக்குதல் அதிகமிருக்கும். அரசாங்கம் “இரண்டு முன் போருக்கு” தயாராகி வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்ற - ஒன்று, கொரேனா நோய்த்தொற்றுகளுக்கு எதிராக நடந்து வருகிறது, மற்றொன்று உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நடக்கவுள்ளது.

ஆப்பிரிக்காவிலிருந்து புறப்படும் வெட்டுக்கிளி கூட்டம் வரும் வழிகளில் இனப்பெருக்கம் செய்து,   பாலைவன வெட்டுக்கிளிகளுடன் சேர்ந்து ஒரு வெட்டுக்கிளி கூட்டம் ஏமன், பஹ்ரைன், குவைத், கத்தார், ஈரான், சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகியவற்றைக் கடந்து  நிலத்திற்குள் பயணிக்கும். இதனால் பஞ்சாபில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்.  ஹரியானா,  இந்தோ-கங்கை சமவெளி, இந்தியப் பெருங்கடலைக் கடந்து செல்லும் மற்றொரு கூட்டம்  இந்தியாவில் உள்ள பண்ணைகளை நேரடியாகத் தாக்கிவிட்டு வங்கதேசத்தை நோக்கிச் செல்லக்கூடும். இது ஒரு கடுமையான உணவு பாதுகாப்பு சிக்கலை ஏற்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன

ஒரு சதுர கிலோமீட்டர் சுமார் 40 மில்லியன் வெட்டுக்கிளிகளைக் கொண்டதாக இருக்கும். ஒரு நாளில் 35,000 பேர் சாப்பிடும் உணவை அது சாப்பிடும். வெட்டுக்கிளி கூட்டத்தை எதிர்த்துப் போராடும் பெரும்பாலான நாடுகள் முக்கியமாக ஆர்கனோபாஸ்பேட் வேதிப்பொருளையே நம்பியுள்ளன, அவை வாகனம், வான்வழி தெளிப்பான்களால் சிறிய செறிவூட்டப்பட்ட அளவுகளில் வயல்களில் தெளிக்கப்படுகின்றன.

வெட்டுக்கிளிகளின் தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு உலக உணவுத் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் டேவிட் பீஸ்லி அளித்துள்ள விளக்கத்தில் தொற்றுநோய் இப்போது “பசி தொற்றுநோயாக” மாறக்கூடும் என்று எச்சரித்துள்ளார். கொரோனா தாக்குல்  130 மில்லியன் மக்களை பட்டினியின் விளிம்பிற்கு தள்ளும் என்று மதிப்பிட்டதாகவும் வெட்டுக்கிளி தாக்குதலால் பீஸ்லி கடுமையான பட்டினியை எதிர்கொள்ளும் மக்களின் உலகளாவிய மொத்தம் 265 மில்லியனாக இருக்கும் என்றும் பீஸ்லி தெரிவித்துள்ளார்.

;