india

img

காஷ்மீர் விவகாரம் : மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான 370 பிரிவை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக, மத்திய அரசு மற்றும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டனர்.

கடந்த 5-ஆம் தேதி, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான 370 மற்றும் 35ஏ ஆகிய பிரிவுகளை, மோடி அரசு நீக்கி ஜம்மு காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. அதே போன்று, காஷ்மீரில் துணை ராணுவத்தினர் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, பருக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். தகவல் தொடர்புகள் முடக்கப்பட்டதுடன், ஊடகங்கள் செய்தி சேகரிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளன. மேலும், காஷ்மீருக்கு செல்ல முயன்ற அரசியல் தலைவர்கள் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டனர். இதற்கிடையில், இது போன்ற கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, ஜம்மு காஷ்மீர் தொடர்பான வழக்குகள் அனைத்தும், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அக்டோபர் முதல் வாரத்தில் இருந்தே இந்த மனுக்கள் மீது விசாரணை துவங்கும் எனவும் அறிவித்தனர். மேலும், இது தொடர்பாக, மத்திய அரசு மற்றும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டனர்.
 

;