india

img

“கொரோனா 4ஆவது அலை ஏற்படாது” – நச்சுயிரியல் நிபுணர் கருத்து  

இந்தியாவில் கொரோனா 4ஆவது அலை ஏற்படாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநரும், நச்சுயிரியல் நிபுணருமான ஜேக்கப் ஜான் கருத்து தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக பேசிய நிபுணர் ஜேக்கப் ஜான், நாட்டின் கொரோனா தொற்றின் 3ஆவது அலை முடிவுக்கு வந்துவிட்டது. முற்றிலும் மாறுபட்ட மாறுபாடு வராவிட்டால் நாட்டில் 4ஆவது இருக்காது என்று கூறினார்.

கடந்த ஜனவரி 21 ஆம் தேதி முதல் கொரோனா மூன்றாம் அலை குறைந்து வருகிறது. கொரோனா மூன்றாம் அலையின் தொடக்கத்தில் 3.4 லட்சத்திற்கும் அதிகமான தினசரி கொரோனா பாதிப்புகள் பதிவாகியது.

நேற்றைய தினம் (மார்ச் 8) நிலவரப்படி இந்தியாவில் 3,993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 662 நாள்களுக்குப் பிறகு பதிவாகியுள்ள மிகக்குறைந்த பாதிப்பு இதுவாகும்.  தற்போது கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் இறுதிக்கட்டத்தை நாம் எட்டியுள்ளது உறுதியாகியுள்ளது என்றார்.

கடந்த காலத்தில் சுவாசக்குழாயில் பரவும் நோய்கள் அனைத்தும் இன்புளூவன்சாவால் ஏற்பட்டது. ஒவ்வொரு இன்புளூவன்சாவும் 2 அல்லது 3 அலைகளுக்குப் பிறகு முடிவடைந்தன. இரண்டாவது அலையின்போது, கொரோனா மூன்றாவது அலை ஏற்படாது என்று நிபுணர்கள் முன்பு கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் கொரோனா மூன்றாவது அலை ஒமைக்ரான் வகை தொற்றால் ஏற்பட்டது.

ஒமைக்ரான் வகை மாற்றமடைந்த வைரஸை யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்தநேரத்தில் இருந்த மாற்றமடைந்த கொரோனா வகையைக் கொண்டே மூன்றாவது அலை ஏற்படாது. மேலும் நோய் கண்காணிப்பு மற்றும் தொற்றுகளின் மாதிரியின் மரபணு வரிசை முறை பரிசோதனை தொடர வேண்டும் என்று கூறினார்.