india

img

கோவை - பெங்களூரு இரவு நேர ரயில் மக்களவையில் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தல்

புதுதில்லி:
கோயம்புத்தூரில் இருந்து பெங்களூருக்கு இரவு நேர ரயில்சேவை வழங்கிட வேண்டும் என்கிற கோரிக்கையை மக்களவையில் பி.ஆர்.நடராஜன் மற்றும் சண்முக சுந்தரம் ஆகியோர் வலியுறுத்தி னர். நாடாளுமன்ற மக்களவையில் வியாழ
னன்று நடைபெற்ற ரயில்வே மானிய கோரிக்கையின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உரையாற்றினார். அவரது  உரையில்,பொள்ளாச்சி கோயம்புத்தூர் இடையிலான அகல ரயில் பாதை துவங்கப்பட்டு எட்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. பணிகள் துவங்குவதற்கு முன்பு கோயம்புத்தூர் - இராமேஸ்வரம், கோயம்புத்தூர் - கொல்லம், கோயம்புத்தூர் - மதுரை போன்ற வழித்தடங்களில் இயங்கி வந்தரயில்கள் நீண்ட கோரிக்கைக்கு பின்பும் மீண்டும் துவங்கப்படாமல் உள்ளது. இந்த வழித்தடங்களில் முன்பு இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் உடனடியாக இயக்கிட வேண்டும்.மேலும் கோயம்புத்தூர் பெங்களூர் இடையிலான இரவு நேர ரயில் இயக்கப்படும் என 12 ஆண்டுகளுக்கு முன்பு 2007ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிதிநிலைஅறிக்கையில் அன்றைய ரயில்வே துறைஅமைச்சர் அறிவிப்பு செய்தார். இந்தஅறிவிப்பு இன்று வரை நிறைவேற்றப்படாமல் இருப்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என்று கூறினர். 
கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உடன் இணைந்துபொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்சண்முகசுந்தரமும் இதனை வலியுறுத்தினார்.

;