india

img

மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து!

புதுதில்லி,செப்.04- மேலும் 5 மொழிகளுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமிஸ், பெங்காலி ஆகிய 5 மொழிகளுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்க ஒன்றிய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அஸ்விணி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், கன்னடம், ஒடியா, தெலுங்கு உள்ளிட்ட 6 மொழிகளுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.