india

img

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. தேர்வெழுதிய 87.33% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. நாடு முழுவதும் 16,728 சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து சுமார் 16.6 லட்சம் மாணவர்கள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளனர். இந்த நிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. அதில், இந்த ஆண்டு தேர்வெழுதிய மாணவர்கள் 87.33% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், 6.80% மாணவர்கள் 90 மற்றும் அதற்கு அதிகமான சதவிகிதத்தில் மதிபெண்கள் பெற்றுள்ளனர்.
http://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை பார்த்துகொள்ளலாம்.
இந்திய அளவிலான மாணவர் தேர்ச்சி விகிதத்தில் திருவனந்தபுரம் (99.91%) முதல் இடத்திலும், பெங்களூரு (98.64%) இரண்டாவது இடத்திலும், சென்னை (97.40%) மூன்றாவது இடத்திலும் உள்ளன.
 

;