india

img

சோனியா காந்தி மீதான வழக்கு எதிர்க்கட்சிகளை முடக்கும் முயற்சி...

பெங்களூரு:
பிஎம்-கேர்ஸ் நிதி தொடர்பாக, அவதூறான கருத்துக்களைப் பரப்பியதாக கூறி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது, கர்நாடக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கொரோனா நிவாரணப் பணிகளுக்கான நன்கொடைகளைப் பெறு வதற்காக, ‘பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரணம்’(PM CARES Fund) என்ற பெயரில் நிதியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.ஏற்கெனவே, பிரதமர் நிவாரண நிதியம் (Prime Minister Relidf Fund) இருக்கும்போது புதிதாக ஏற்படுத்தப் பட்ட ‘பிஎம்-கேர்ஸ்’ கேள்விகளை எழுப்பியது. இதில் வரும் நன்கொடைகள் அரசின் தணிக்கை நடவடிக்கைக்குள் வராது என்ற விதிமுறைகள் சந்தேகங்களை அதிகப்படுத்தியது.
இதுதொடர்பாக விமர்சனங்களை வைத்த காங்கிரஸ் கட்சி, “பிஎம் கேர்ஸ்நிதியில் முரண்பாடுகள் இருக்கின் றன. வெளிப்படைத்தன்மை இல்லை.ரகசியம் எப்போதும் கெட்ட விஷயங்களுக்கான வழி” என்று தனது டுவிட்டர்பதிவில் குறிப்பிட்டது.இதற்காகவே, கே.வி. பிரவீண் என்பவர் அளித்த புகாரின் பேரில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது, ஐசிபி பிரிவு 505 (1)பி 153-இன் கீழ் (மக்களைத் தூண்டிவிடுதல், குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராகக் குற்றம் இழைக்கத் தூண்டுதல்) ஆகிய பிரிவுகளின் கர்நாடக மாநிலம், சிவமோகா மாவட்டம், சகாரா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனை காங்கிரஸ் கட்சி கடுமை யாகக் கண்டித்துள்ளது. “ஆளும் அரசைக் கேள்வி கேட்பதுஎன்பது எதிர்க்கட்சியின் பணி,பொறுப்பு. ஆனால், எதிர்க்கட்சிகளைச் செயல்படவிடாமல் அதன் குரல்களை மத்திய அரசு நெரிக்கிறது” என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுபாஷ் அகர்வால் கூறி யுள்ளார்.

;