india

img

பேராசிரியர் சாய்பாபா விடுதலை

கடந்த 8 ஆண்டுகளாக சிறையிலிருந்த பேராசிரியர் சாய் பாபாவை  மும்பை உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

மார்ச் 7, 2017 அன்று, கட்சிரோலியில் உள்ள விசாரணை நீதிமன்றம் பேராசிரியர் சாய்பாபாவுக்கு சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக தெரிவித்தது. இந்த வழக்கில் ரோஹித் தியோ மற்றும் அனில் பன்சாரே ஆகியோர் அடங்கிய விசாரணை நீதிமன்ற அமர்வு, மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட மகேஷ் திர்கி, பாண்டு போரா நரோட், ஹேம் கேசவதத்தா மிஸ்ரா, பிரசாந்த் ராஹி, விஜய் நன் திர்கி மற்றும் ஜி.என்.சாய்பாபா ஆகியோரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சாய்பாபா உள்பட தண்டிக்கப்பட்ட மற்றவர்களும் இணைந்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கடந்த ஐந்து ஆண்டுகளாக மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் நிலுவையிலிருந்தது. தண்டிக்கப்பட்ட ஐந்து குற்றவாளிகளில் ஒருவர் மேல்முறையீடு மனு விசாரிக்கப்படும் முன்பே உயிரிழந்தார்.

இந்நிலையல் இன்று இந்த வழக்கில் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 5 போரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. வேறு எந்த வழக்கிலும் குற்றம் சாட்டப்படாவிட்டால், இவர்களை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

;