“கட்சியை வளர்ப்பது என்பது வேறு, கூட்டணி அமைத்து அதிகாரத்தைப் பிடிப்பது என்பது வேறு. இரண்டையும் குழப்புக் கொள்ளக் கூடாது. இந்தியா முழுவதும் உள்ள கள யதார்த்தம் என்ன? இனிமேல் எந்த அரசியல் கட்சியும் தனித்து நின்று தேர்தலில் வெற்றி பெற முடியாது. ஒரே கட்சியால் அனைத்து தரப்பு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. ஆகவே, பலரது தோழமை தேவை. அவ்வாறு தமிழகத்தில் பலமாக இருந்ததால்தான் பாஜகவை தோற்கடிக்க முடிந்தது” என்று தமிழ்நாடு சிறுபான்மை
யினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.