கோவாவில் உள்ள பிட்ஸ் பிலானி பல்கலைக்கழகத்தில், ரிஷி நாயர் (19 வயது) என்ற மாணவர், தனது விடுதி அறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
கோவாவில் உள்ள பிட்ஸ் பிலானி பல்கலைக்கழகத்தில், பெங்களூருவை சேர்ந்த ரிஷி நாயர் (19 வயது) என்ற மாணவர் இரண்டாம் ஆண்டு இயற்பியல் படித்து வந்தார். கடந்த செப். 4-ஆம் தேதி இவர் நீண்ட நேரம் விடுதி அறையை திறக்காடதால், சந்தேகமடைந்த விடுதி நிர்வாகிகள், கதவு உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, ரிஷி நாயர் இறந்த நிலையில் கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 10 மாதங்களில் இதுவரை 5 மாணவர்கள் பல்கலைக்கழக விடுதியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். ஓம் பிரியன் சிங் (டிசம்பர் 2024), அதர்வ் தேசாய் (மார்ச் 2025), கிருஷ்ணா கசேரா (மே 2025), மற்றும் குஷாக்ரா ஜெயின் (ஆகஸ்ட் 2025) ஆகிய மாணவர்களும் விடுதி அறைகளில் இறந்து கிடந்தனர்.
இந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.