india

img

பாஜகவில் இருந்து கழன்று கொள்ளும் கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணி யின் முன்னாள் தொடக்க  அதிரடி வீரரும், கிழக்கு  தில்லி தொகுதியின் பாஜக எம்பி யுமான கவுதம் கம்பீர் தற்போது ஐபிஎல் போட்டிகளில் ஆலோ சகராக பணியாற்றி வருகிறார். 

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு  பெற்ற உடனே கம்பீர் கடந்த மார்ச் 2019இல் பாஜகவில் இணைந்  தார். இணைந்த உடனே பாஜக  அவருக்கு எம்பி சீட் அளிக்க,  கிழக்கு தில்லி தொகுதியில் வெற்றி பெற்று மக்கள வைக்குச் சென்றார். 

இந்நிலையில், திடீரென வியாழனன்று தனது டுவிட்டர்  எக்ஸ் பக்கத்தில் கம்பீர், “வர விருக்கும் கிரிக்கெட் தொடர் களில் கவனம் செலுத்தும் வகை யில், எனது அரசியல் கடமை களில் இருந்து என்னை விடு விக்குமாறு ஜே.பி. நட்டாவிடம் கேட்டுக் கொண்டேன். மக்க ளுக்குச் சேவை செய்ய எனக்கு  வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன். ஜெய் ஹிந்த்” எனக் கூறியிருக்கிறார்.

கம்பீர் பாஜகவில் இருந்து வெளியேறுவதற்கான கார ணங்கள் தொடர்பாக இதுவரை  எந்தவித தகவலும் வெளியாக வில்லை. வரவிருக்கும் மக்க ளவை தேர்தலில் கம்பீருக்கு மீண்டும் சீட் வழங்க பாஜக மேலி டம் தயங்கி வருவதாக தகவல் வெளியானதால், அவர் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என அதிகாரப்பூர்வமற்ற தக வல் வெளியாகியுள்ளது.

இனி மதிப்பு இருக்காது என ஓட்டம் பிடித்து இருக்கலாம்

கம்பீர் கடந்த ஐபிஎல் சீசனில்  லக்னோ அணியின் ஆலோசகராக இருந்தார். ஆலோசகராக இருந்தாலும் அணியின் பயிற்சியாளர், உரிமையாளர் போல ஆதிக்கம் செலுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து 10 வருட பகையை தீர்ப்பதாகக் கூறி, ஐபிஎல் போட்டியின் பொழுது விராட் கோலியுடன் மோதல் விவகாரம், ரசிகர்களிடம் ஆபாச சைகையை காண்பித் தது உட்பட பல்வேறு சர்ச்சை களில் சிக்கினார். 

பாஜகவின் வகுப்புவாத அரசியலை கிரிக்கெட்டிற்குள் நுழைக்க கம்பீர் முயற்சிக்கிறார் என அரசியல் ஆர்வமில்லாத கிரிக்கெட் ரசிகர்கள், அரசியல் நிபுணர்களை போன்று கருத்து தெரிவித்து அவரை சமூகவலைத்தளங்களில் வறுத்தெடுத்தனர். தற்போது பாஜக மீதான மதிப்பு குறைந்து  வரும் நிலையில், அதே போன்று கிரிக்கெட்டில் கம்பீ ருக்கும் மதிப்பு குறைந்துவிட் டது. மேலும் வரவிருக்கும் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் லக்னோ அணி, கம்பீர் ஆலோ சகராக வேண்டாம் என்று அவரை துரத்தியது. இதனால்  அவர் கொல்கத்தா அணி யின் ஆலோசகராக நிய மிக்கப்பட்டுள்ளார்.

இனிமேல் பாஜகவில் இருந்தால் நமக்கு மதிப்பு கிடைக்காது எனக் கருதி கம்பீர் பாஜகவில் இருந்து கழன்று இருக்கலாம் என மற்றொரு தகவலும்  வெளியாகியுள்ளது.