india

img

ஒன்றிய அமைச்சரவை செயலராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.வி.சோமநாதன் நியமனம்

ஒன்றிய அமைச்சரவை செயலராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் நிதித்துறைச் செயலராக இருக்கும் டி.வி.சோமநாதன் தற்போது ஒன்றிய அமைச்சரவை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் ஆகஸ்ட் 30 முதல் அடுத்த 2 ஆண்டுகளுக்குப் பதவிவகிக்கவுள்ளார். டி.வி.சோமநாதன்  தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது செயலாராக பணியாற்றியவர்.