india

img

‘ஆட்சிக்கு வந்ததுமே மாநிலங்களுக்கான நிதியை வெட்டிக் குறைக்க முயன்ற மோடி’

புதுதில்லி, ஜன. 18 - 2014-இல் ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுக்க மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியை வெகுவாக குறைக்க பிரதமர் மோடி திட்டமிட்டதாக பிரபல ‘அல் ஜசீரா’ ஊடகம் குற்றச்சாட்டு வைத்துள்ளது. “இதுதொடர்பாக, பட்ஜெட் தாக்கல் செய் வதற்கு முன்பாக, பிரதமர் மோடி இந்திய நிதி ஆணையமான ‘நிதி ஆயோக்’ உடன் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தினார்; அப்போது, நாட்டின் மாநிலங்களுக்கு ஒதுக்க ப்படும் நிதியை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று அவர் கூறியதற்கு, நிதி ஆயோக்கில் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால், அதற்கு முன்னதாகவே தனது விருப்பப்படி, பட்ஜெட்டில் மாநிலங்களுக் கான நிதியை மிகக் குறைவாகவே ஒதுக்கி விட்ட பிரதமர் மோடி, இவ்வாறு நிதியை வெட்டுவதற்கு இந்திய நிதி ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து, மாநில அரசுக்கான வரிப் பங்கீட்டை குறைப்பது சரியாக இருக் காது என்று கூறிய நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்யும் 2 நாட்களுக்கு முன் அவசர அவசரமாக மொத்த பட்ஜெட்டையும் வேறு வழியின்றி மாற்றி உள்ளார்.

தனது திட்டத்திலிருந்தும் பின்வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்” என்று என்று அல் ஜசீரா குறிப்பிட்டுள்ளது. ஆனால், “இவ்வளவும் செய்த பிரதமர் மோடி, மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் வரி குறித்த நிதி ஆயோக் பரிந்துரைகளை வர வேற்பதாக நாடாளுமன்றத்தில் பொய் பேசி னார். அதாவது மறைமுகமாக நிதி ஒதுக்கு வதை எதிர்த்துவிட்டு, நாடாளுமன்றத்தில் அதை வரவேற்பது போல பேசினார்” என்று தெரிவித்திருக்கும் அல் ஜசீரா, “பிரதமர் மோடி மீதான இந்த குற்றச்சாட்டுகளை வைத்ததே நிதி ஆயோக் சிஇஓ பி.வி.ஆர். சுப்பிரமணியம்தான்” என்று உண்மையைப் போட்டு உடைத்துள்ளது.

“நிதி ஆயோக் சிஇஓ பி.வி.ஆர். சுப்பிர மணியம்தான்.. மோடி 2014-இல் நடத்திய மறைமுக பேச்சுவார்த்தை, அதில் நிதியை குறைக்க திட்டமிட்டது போன்ற செயல்களை செய்ததாக குற்றம்சாட்டி உள்ளார். மோடி க்கும், நிதி ஆயோக் தலைவர் ரெட்டிக்கும் இடையில் பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்ததே தான்தான் என்று பி.வி.ஆர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்” என்று அல் ஜசீரா தெரிவித்துள்ளது. மேலும் “இந்திய ஒன்றிய பட்ஜெட்டில் பல விஷயங்களை மறைக்கின்றனர். இந்த விஷயங்கள் எல்லாம் வெளியே வந்தால் வேறு மாதிரி இருக்கும். அதை எல்லாம் கண்டுபிடிக்க ‘ஹிண்டன்பர்க்’ போன்ற நிறுவனங்கள்தான் பட்ஜெட்டை ஆடிட் செய்ய வேண்டும்” என்றும் பி.வி.ஆர். சுப்பிரமணியம் கூறிஉள்ளார்.

அதாவது பட்ஜெட் கணக்குகளின் உண்மை தன்மை  குறித்து கேள்வி எழுப்பும்விதமாக அவர் இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார். பி.வி.ஆர். சுப்பிரமணியம் மோடியின் நெருங்கிய வட்டத்தில் இருந்தவர் என்று  அறியப்படும் நேரத்தில், அந்த சுப்பிர மணியமே மோடிக்கு எதிராக குற்றச்சாட்டுக் களை எழுப்பியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மாநிலங்களின் நிதியை ஒன்றிய  அரசு குறைகிறது என்று தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்கள் புகார் எழுப்பி வரும் நிலையில்தான் இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது.