india

img

பலம் வாய்ந்த ராணுவம்: நான்காமிடத்தில் இந்தியா

குளோபல் பயர்பவர் அமைப்பு, உலகளவில் சக்திவாய்ந்த ராணுவத்தை கொண்ட நாடு கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளி யிட்டு வருகிறது. அதன்படி, வீரர்களின் எண் ணிக்கை, ராணுவ உபகரணங்கள், நிதி  நிலைத்தன்மை, புவியியல் இருப்பி டம் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கார ணங்களின் அடிப்படையில், 2024-ம்  ஆண்டிற்கான உலகளாவிய ராணுவ  வலிமை கொண்ட 145 நாடுகளின் தர  வரிசையைத் தற்போது வெளியிட்டுள்  ளது.  

இதில் அமெரிக்கா முதலிடம் பிடித்  துள்ளது. 2ஆவது இடத்தில் ரஷ்யாவும் 3 ஆவது இடத்தில் சீனாவும் உள்ளது.  இந்த தர வரிசையில் இந்தியா 4ஆவது  இடத்தில் இருக்கிறது. தென் கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், துருக்கி, பாகிஸ்தான் இத்தாலி ஆகிய  நாடுகள் முறையே 5 முதல் 10-வது இடத்தில் உள்ளன. அதேபோல் உலகில் மிகக்  குறைந்த சக்தி வாய்ந்த ராணு வத்தை கொண்ட நாடுகள் பட்டிய லில் பூடான் முதலிடத்தில் உள்ளது.  

மால்டோவா, சுரினாம், சோமாலியா, பெனின், லைபீரியா, பெலிஸ், சியாரா  லியோன், மத்திய ஆப்பிரிக்க குடி யரசு, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் முறையே 2 முதல் 10 ஆவது இடத்தில் உள்ளன.