india

‘இந்துவா என்பதை அறிய டிஎன்ஏ பரிசோதனை வேண்டும்’

பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநி லத்தில் கல்வித் துறை அமைச்சராக இருக் கும் மதன் திலாவர் சமீபத்  தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில், “ஒருவர் இந்துவா? இல்  லையா? என்பதை அவர் களின் டிஎன்ஏவை வைத்து  பரிசோதனை செய்ய வேண் டும். அவர்கள் இந்துவாக இல்லையென்றால், அவர் களின் தந்தை யார்? என்  பதை கண்டுபிடிக்க வேண் டும்” என மதவெறியை தூண் டும் வகையில் பேசினார். 

இவரது பேச்சுக்கு மாநி லம் முழுவதும் கண்டனங் கள் எழுந்து வருகின்றன. இந் நிலையில், “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்  கும் பாரதிய ஆதிவாசி கட்சி யினர் அமைச்சரின் பேச்சை கண்டித்து பன்ஸ்வாராவில் போராட்டம் நடத்தி வருகின்ற னர். பாரதிய ஆதிவாசி கட்சி  தலைவரும், எம்.பி.யுமான ராஜ்குமார் ரோட்  மற்றும் கட்சித் தொண்டர்கள் தங் கள் ரத்த மாதிரிகளை கை களில் பிடித்துக் கொண்டு அமைச்சர் மதன் திலாவரின் இல்லத்தை நோக்கி பேர ணியாகச் சென்றனர். ஆனால்  காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதைத்  தொடர்ந்து, அமர் ஜவான்  ஜோதி அருகில் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். 

போராட்டக் களத்தில் ராஜ்குமார் ரோட் கூறுகை யில், “பாஜக தலைவர்கள் மதவாத அரசியலை நிறுத்த வேண்டும். எங்கள் டிஎன்ஏவை பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் தலைமுடி, நகங்கள் போன் றவற்றை தபால் மூலம் அமைச்சர் திலாவருக்கு அனுப்பப் போகிறோம்’ எனக் கூறினார். 

இந்தப் போராட்டம் மாநி லம் முழுவதும் பழங்குடி யினர் அதிகம் வாழும் பகு தியில் தீவிரமடைய வாய்ப் புள்ளது என தகவல் வெளி யாகியுள்ளது.

;