india

img

இக்னோ பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற 93 வயது முதியவர்

இக்னோ பல்கலைக்கழகத்தில், சிவசுப்பிரமணியம் என்னும் 93 வயதுடைய முதியவர் முதுகலைப் பட்டத்தைப் பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம். இவர் 1940-ல் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர், அவரால் தொடர்ந்து படிக்க முடியாத நிலையில், வர்த்தக துறையில் அவர் எழுத்தர் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு, பல முறை முயற்சித்த போதும் அவரால் பட்டப்படிப்பில் சேர முடியாமல் போனது. தொடர்ந்து துறைத் தேர்வுகளை எழுதிக் கொண்டே வந்த சிவசுப்பிரமணியம், தனது 58வது வயதில் வர்த்தக துறையில் இயக்குநராக ஓய்வு பெற்றார். ஆனால் பட்டதாரியாக வேண்டும் என்ற அவரின் ஆசை மட்டும் நிறைவேறவே இல்லை. 

இந்த சூழலில், இந்திரா காந்தி திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு வயது வரம்பு இல்லை என்று அறிந்த சிவசுப்பிரமணியம், தனது 87வது வயதில் இக்னோவில் பொது நிர்வாகவியல் படிப்புக்காக விண்ணப்பித்தார். கடந்த 6 ஆண்டுகளாக தினசரி 5 மணிக்கு எழும் அவர், படிப்பில் ஆழ்ந்துவிடுகிறார். வயது காரணமாக கையெழுத்து மாறிவிட்டதால், அவரின் மகள் அசைன்மென்ட் எழுதிக் கொடுக்கிறார். தேர்வுகளின்போது உடன் சென்று தேர்வையும் எழுதிக் கொடுக்கிறார். இந்நிலையில், சிவசுப்பிரமணியம் தனது 93வது வயதில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். 

;