டிஜிட்டல் பண மோசடிகளில் ஈடுபட்ட 70 லட்சம் மொபைல் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய நிதித்துறை செயலாளர் விவேக் ஜோஷி தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் கட்டண மோசடி மற்றும் நிதி தொடர்பான இணைய பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய நிதித்துறை செயலாளர் விவேக் ஜோஷி, டிஜிட்டல் பண மோசடிகளில் ஈடுபட்ட 70 லட்சம் மொபைல் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வங்கிகளில் டிஜிட்டல் பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்த ஆலோசனைகள் நடந்து வருகிறதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.