india

img

இந்தியாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

இந்தியாவில் தில்லி மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் உகான் நகரத்தில் இருந்து கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் 3000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும், 89,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம், கேரளாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி செய்தது. இந்நிலையில், 3 பேரும் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

இதைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் ஒருவர் தில்லியை சேர்ந்தவர் என்றும், அவர் சமீபத்தில் இத்தாலியில் இருந்து தில்லி திரும்பியவர் என்றும் தெரியவந்துள்ளது. அதேபோல் மற்றொருவர், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், அவர் சமீபத்தில் துபாய் சென்றிருந்தார் என்றும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. 
 

;