india

img

இந்தியர்கள் 13 லட்சம் பேரின் கிரெடிட், டெபிட் கார்டு விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்

இந்தியர்கள் 13 லட்சம் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக குரூப்-ஐபி என்ற பாதுகாப்பு ஆராய்ச்சி குழு தகவல் வெளியிட்டுள்ளது. 

சிங்கப்பூரை சேர்ந்த குரூப் - ஐபி என்ற சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி குழு (Group-IB cyber security research team) நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தகவல்கள், ஏடிஎம்களில் இருந்து ஸ்கிம்மர்கள் மூலமாகவோ அல்லது போஸ் இயந்திரங்கள் மூலம் திருடும் முயற்சிகளும் நடை பெறுவதாகவும், இந்த திருடப்பட்ட தகவல்களை ’ஜோக்கர்ஸ் ஸ்டாஷ்’ (Joker's Stash) என்ற கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும், இந்த திருடப்பட்ட தகவல்களின் மொத்த மதிப்பு 920 கோடி ரூபாய் என்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதில் அதிர்ச்சியூட்டும் செய்தி என்னவெனில், ஹேக் செய்யப்பட்டதாக சொல்லப்படும் மொத்த கார்டு தகவல்களில், 98 சதவிகிதம் இந்திய வங்கிகள் என்றும், அதில், 18 சதவிகித தகவல்கள் ஒரே வங்கியைச் சார்ந்த என்றும் தெரிவித்துள்ளது. எனினும் வங்கி, பணம் மதிப்பு போன்ற தகவல்களை அந்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிடவில்லை. இவ்வாறு திருடப்படும் ஒவ்வொரு தகவலும், 100 டாலர் வரையில் (இந்திய மதிப்பில் 7000 ரூபாய்க்கு) விற்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு விற்கப்படும் தரவுகளில் கார்டு எண், சிவிவி எண், இதன் காலாவதி தேதி, கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்கள் உள்ளிட்ட பல தகவல்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.


 

;