india

img

பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரத்துக்கு தடை!

பாபா ராம் தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரத்துக்குத் தடை விதித்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
டாபர் நிறுவனத்தின் ஸாவனபிராஷ் லேகியத்தில் 47 ஆயுர்வேத மருந்துகள் மட்டுமே உள்ளன என்றும், பதஞ்சலியின் தயாரிப்பில் 51 மருந்துகள் உள்ளதாகவும் பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் வெளியிட்டிருந்தது. 
இந்நிலையில் மக்களைத் தவறாக வழிநடத்துவதாகவும். பதஞ்சலியின் விளம்பரத்திற்குத் தடை விதிக்கக் கோரியும் டாபர் நிறுவனம் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. 
இன்று நடைபெற்ற வழக்கின் விசாரணையில் மக்களைத் திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களைப் பதஞ்சலி நிறுவனம் வெளியிடத் தில்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 14 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி மினி புஷ்கர்ணா உத்தரவிட்டுள்ளார்.