india

img

பெட்ரோல் விலையை எதிர்ப்பவர்கள் ஆப்கானிஸ்தான் செல்லலாம்..... பீகார் பாஜக எம்எல்ஏ ஆணவப் பேச்சு....

பாட்னா:
குறைந்த விலையில் பெட்ரோல் வேண்டும் என்பவர்களும், இந்தியாவில் வாழபயமாக இருக்கிறது என்பவர்களும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்குச் செல்லலாம் என்று பீகார் மாநில பாஜக எம்எல்ஏ ஹரி பூஷன் தாக்கூர் பச்சால் பேசியுள்ளார்.

சிஏஏ, என்ஆர்சி சட்டங்களை எதிர்த்துப்போராடும் சிறுபான்மை இஸ்லாமியர்களையும், பெட்ரோல்- டீசல் உள்ளிட்ட பல்வேறுபொருட்களின் விலை உயர்வை எதிர்த்துப் போராடும் எதிர்க்கட்சிகளையும் குறிவைத்து, ஹரி பூஷன் தாக்கூர் இவ்வாறு பேசியுள்ளார். “ஆப்கானிஸ்தான் போரால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. ஆப்கனில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவது போல், வேறு எங்கும் பாதுகாப்புஅளிக்கப்படுவது இல்லை.இந்தியாவில் வாழ அச்சப்படுவோர்கள், தாராளமாக ஆப்கானிஸ்தானுக்கு செல்லலாம். அங்கு பெட்ரோல், டீசல் விலை மிகவும்குறைவு. அங்கு சென்றால்தான் இந்தியாவின் அருமை தெரியவரும். காடுகளுக்குக் கூட இங்கு சட்டத்திட்டங்கள் உள்ளன. ஆனால் ஆப்கானிஸ்தானில் எந்த சட்டத் திட்டங்களும் இல்லை. அநீதி காரணமாகவே ஆப்கானிஸ்தான் பிளவுபட்டது” என்று ஹரி பூஷன் தாக்கூர் கூறியுள்ளார்.

;