india

img

தொழிலாளர்க்கான ஊதியம் இந்தியாவில்தான் மோசம்.... பாகிஸ்தான், நேபாளம், சீனா, இலங்கையை விட குறைவு...

புதுதில்லி:
இந்தியாவில்தான் தொழிலாளர்களுக்கு மிக மிகக் குறைந்த ஊதியம் (Monthly Minimum Wage) வழங்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் அவையின் தொழிலாளர் பிரிவு (UN’slabour arm)அறிக்கை அளித்துள்ளது.

இந்த விஷயத்தில், பாகிஸ்தான், நேபாளம், சீனா, இலங்கை ஆகிய அண்டை நாடுகளைக் காட்டிலும் இந்தியா மோசமான நிலையில் இருப்பதாகவும் அது கூறியுள்ளது.குறைந்தபட்ச மாத ஊதியத்திற் கான உலகளாவிய சராசரி, 9 ஆயிரத்து 720 ரூபாய் என்ற நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானில் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 9 ஆயிரத்து 820 என்பதாக உள்ளது. அதாவது,உலக சராசரியை விட அதிகமாக இருக்கிறது. நேபாளத்திலும் கூட 7 ஆயிரத்து920 ரூபாய், சீனாவில் 7 ஆயிரத்து 60 ரூபாய் என உள்ளது. சின்னஞ்சிறு நாடான இலங்கை தனது நாட்டுத் தொழிலாளர்களுக்கு மாதாந்திர குறைந்தபட்ச ஊதியமாக 4 ஆயிரத்து 940 ரூபாய் தருகிறது. ஆனால், இந்த நாடுகள் அனைத்தைக் காட்டிலும் மோசமான ஊதியவிகிதத்தை இந்தியா கொண்டுள்ளது.அது இங்குள்ள தொழிலாளர்களுக்கு வெறும் 4 ஆயிரத்து 300 ரூபாயையேகுறைந்தபட்ச ஊதியமாக தருகிறது என்று ஐ.நா. அவையின் தொழிலாளர் பிரிவு தெரிவித்துள்ளது.

2019-ஆம் ஆண்டில், இந்தியாவில் குறைந்தபட்ச மாதாந்திர ஊதியத்தை, வாங்கும் திறன் சமநிலை (பிபிபி) விதிமுறைகளின் அடிப்படையில் 5 ஆயிரத்து 215 ரூபாயாக (நாளொன்றுக்கு 176 ரூபாய்)சர்வதேச தொழிலாளர் அமைப்பு(International Labour Organization -ILO) மதிப்பிட்டிருந்தது. இந்த அறிக்கையை சுட்டிக்காட் டும் ஐ.நா. பிரிவு, 2019-இல் ஆசிய - பசிபிக் பிராந்தியத்திலுள்ள 30 நாடுகளில், வங்கதேசம் மற்றும் சாலமன்தீவுக்கு அடுத்தபடியாக சற்று மேலேஇந்தியா இருந்தது. மற்றபடி அப்போதும் பாகிஸ்தான், இலங்கை மற்றும் வியட்நாமைக் காட்டிலும் பின்தங் கியே இந்தியா இருந்தது. தற்போதோ முன்பைக் காட்டிலும்மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 5 ஆயிரத்து 215 ரூபாயிலிருந்து, 4 ஆயிரத்து 300 ரூபாய்க்குஇறங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.கொரோனா தாக்கத்தையொட் டிய முதல் இரண்டு கட்ட - 40 நாள்பொதுமுடக்கத்தின்போது இந்தியாவில் முறைசார் ஊழியர்கள் சராசரியாக 3.6 சதவிகித ஊதியக் குறைப் புக்கு உள்ளாகினர். ஆனால், இதே
காலகட்டத்தில் இந்தியாவில் முறைசாரா தொழிலாளர்கள், தங்கள் ஊதியத்தில் 22.6 சதவிகிதத்தை இழந்துள்ளனர் என்று ஐஎல்ஓ அறிக்கை அளித்திருப்பதையும் ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.

;