india

img

தில்லி போராட்டக் களத்தில் அர்ப்பணிப்போடு செயல்படும் இலவச மருத்துவமனை...

புதுதில்லி:
ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி கடந்த 255 நாட்களாக தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழகத்திலும்  விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல்கட்சிகள், அமைப்புகளின் சார்பில் பலகட்ட போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழக விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தில்லியை நோக்கிபடையெடுத்தனர். காவல்துறை யினரின் பல்வேறு அடக்குமுறைகளை யும் சந்தித்து சிங்கு – தில்லி எல்லையில் நடைப்பெற்று வரும் பிரம்மாண்டமான போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பங்கேற்றுள்ளது. தமிழக விவசாயிகள் பங்கேற்பிற்கு பின்னர் போராட்டக் களம் சூடு பிடித்துஉள்ளதாக சம்யுக்த் கிஷான் மோர்ச்சா போராட்டக்குழுவினர் புகழாரம் சூட்டியுள்ளனர்.

போராட்டக்களத்தில் பங்கேற்ற அனைவருக்கும் உணவு, குடிநீர், தேநீர், குளிர்பானம் மற்றும்  அடிப்படைவசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள் ளன. போராட்டத்தில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் உரிய நவீன சிகிச்சை முறைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. பல என்.ஜி.ஓ குழுக்கள் இந்த பணியை சிரமேற்கொண்டு கனிவோடு செய்து வருகின்றனர். குறிப்பாக, லைப் கேர் பவுண்டேஷன் குழுவினர் கடந்த எட்டு மாதங்களாக விவசாயிகளுக்கும், அப்பகுதி மக்களுக்கும் இலவசமாக மருத்துவ சேவைகளை செய்து வருகின்றனர்.கிஷான் மஜ்ஜூர் ஏக்தா ஹாஸ்பிட்டல் என்று பெயரிடப்பட்ட இந்த மருத்துவமனையில் மூன்று மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என பத்து பேர் பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகளை கனிவோடு உபசரித்துவரும் பொறுப்பாளர் பக்சிஸை சந்தித்து, அவரது சேவை குறித்து கேட்டபோது, கடந்த எட்டு மாதங்களாக போராளிகளுக்கு ஏற்படும்உடல் உபாதைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். இதுவரை 60ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயி களுக்கு, தொழிலாளர்களுக்கு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். இந்த சேவைக்கு உறுதுணையாக கால்ஷா எய்டு நிறுவனம் உதவி செய்து வருகிறது. சிங்கு எல்லைப் பகுதி தொழிற்சாலை நிறைந்த பகுதி என்பதால், விபத்துக்கள் அதிகமாக ஏற்படும் அவல நிலை உள்ளது. இதனால்நாள்தோறும் காயங்களோடு வரும் தொழிலாளர்களுக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தப் போராட்டத்திற்கு எங்களது பங்காக நோயில்லா விவசாயிகளை களம் இறக்குவது என்ற நோக்கத்தோடு நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று தெரிவித்தார்.

;