india

img

இந்தியாவில் காற்று மாசுவை 21 சதவீதம் குறைத்துள்ளோம்.... காலநிலை மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

புதுதில்லி:
இதுவரை 21 சதவீதம் காற்று மாசுவை இந்தியா குறைத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

பாரீஸ் காலநிலை மாறுபாட்டு ஒப்பந்தம் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் அன்று 196 நாடுகளுக்கு இடையே ஒப்பந்தமானது. 2016 ஆம்ஆண்டு நவம்பர் 4-ம் தேதியிலிருந்து இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி உலக வெப்பமயமாக்கலை 2 டிகிரி செல்சியசுக்கும் கீழ் குறைப்பது அதிலும் 1.5 டிகிரி செல்சியசுக்கும் கீழாகக் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான வருடாந்திரக் காலநிலை மாநாட்டை ஐக்கிய நாடுகள் சபையுடன் சேர்ந்து பிரிட்டன், பிரான்ஸ், சிலி, இத்தாலி ஆகிய நாடுகள் சேர்ந்து நடத்தின.காணொலிக்காட்சி மூலம் சனிக்கிழமையன்று நடைபெற்ற மாநாட்டில், உலக நாடுகளின் தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்,தொழிலதிபர்கள், சமூக ஆர்வ லர்கள் என பலர் பங்கேற்றனர்.இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், காலநிலை மாறுபாட்டுக்கான பாரீஸ் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைகின்றன. காலநிலை மாற்றத்துக்கு எதிரான நமது போரில் முக்கியமான இலக்குகளை நோக்கி நாம் வைத்த அடியாகும். இன்று நமது இலக்குகளையும், பார்வைகளையும் உயர்வாக வைத்திருக்கிறோம். கடந்த காலத்தில் கடந்து வந்த பாதைகளையும் நாம் மறந்துவிடக் கூடாது.நாம்நம்முடைய இலக்குகளை கண்டிப்பாகப் புதுப்பிக்க வேண்டும். பாரீஸ்காலநிலை மாறுபாட்டு ஒப்பந்தத் தின் இலக்குகளை அடையும் பாதையில் செல்வதோடு மட்டுமல்லாமல், அந்த இலக்குகளையும் தாண்டி எதிர்பார்ப்புகளையும் கடந்து இந்தியா பயணிக்கும்.

இந்தியா இதுவரை கடந்த 5 ஆண்டுகளில் காற்று மாசுவை 21 சதவீதம் குறைத்து, 2005 ஆம் ஆண்டு இருந்த அளவில் கொண்டுவந்துள்ளது. எங்களின் சூரியமின் உற்பத்தித் திறன் கடந்த 2014-ல் 2.63 ஜிகாவாட்ஸ் இருந்த நிலையில் 2020-ல் 36 ஜிகாவாட்ஸாக உயர்ந்துள்ளது. உலக அளவில் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அளவு 4-வது இடத்தில் உள்ளது. 2022 ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட்ஸாக உயர்த்துவோம். 2030 ஆம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட்ஸை எட்டுவோம்.எங்களின் காடு வளர்ப்புத் திட்டமும், காட்டைப் பாதுகாப்பு உயிர்ச்சூழலைப் பாதுகாப்பதும் வெற்றிகரமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உலக அளவில்இந்தியா இரு முக்கிய விஷயங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது. சர்வதேச சோலார் கூட்டமைப்பு மற்றும் பேரிடர் மீள்உள்கட்டமைப்புக்கு முன்னோடி யாக இந்தியா உள்ளது என்றார்.

;