india

img

விவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....

புதுதில்லி:
குடியரசுத் தினத்தன்று தலைநகர் தில்லியில் நடைபெற உள்ள டிராக்டர் பேரணிக்காக நாடு முழுவதுமிருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் குவிந்து வருகின்றனர். இதனால் தில்லிதிணறத் துவங்கியுள்ளது. பல்வேறுமிரட்டல்களையும், அடக்குமுறைகளையும் முறியடித்து விவசாயிகள் அணி அணியாக திரளத் துவங்கியுள்ளனர். 

சிங்கு, திக்ரி, காசிப்பூர், சில்லா எல்லைகள் வழியாக விவசாயிகள் நகரத்தை அடைகிறார்கள். அணிவகுப்புக்கான பாதை முடிவு செய்யப்பட்டு, விவசாயிகள் அமைப்புகளுக்கு காவல்துறை அனுமதி அளித்தது. காவல்துறையுடன் நடந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்ட பாதைகளில் நான்கு அணிவகுப்புகள் தில்லிக்கு செல்லும். சிங்குவிலிருந்து நுழையும் இந்த அணிவகுப்பு தில்லி வழியாக63 கி.மீ தூரம் சென்று ஓச்சண்டி எல்லைவழியாக வெளியேறும். திக்ரியி லிருந்து அணிவகுப்பு 62.5 கி.மீ தூரம் தில்லி வழியாக சென்று ஜரோடா எல்லை வழியாக வெளியேறும். காசிப்பூர், சில்லா எல்லைகளுக்குள் நுழையும் அணிவகுப்புகள் குறித்து காவல்துறையினரும் விவசாயிகளும் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.

மும்பையிலும் இன்று பேரணி
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து மகாராஷ்டிராவில் மிகப்பெரிய விவசாயிகள் அணிவகுப்பு நடைபெறுகிறது. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் 15,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாசிக் நகரிலிருந்து மும்பைக்கு செல்கின்றனர். இந்த அணிவகுப்பு சனிக்கிழமையன்று நாசிக் நகரில் உள்ள கோல்ப் கிளப் மைதானத்திலிருந்து தொடங்கியது. இகத்புரிக்கு அருகிலுள்ள காட்டன்தேவியில் இரவு தங்கியிருந்த விவசாயிகள், ஞாயிற்றுக்கிழமை காலை காசராகாட்டுக்கு நடந்து சென்று அங்கிருந்து மும்பைக்கு தங்கள் வாகன பயணத்தை மீண்டும் தொடங்கினர்.நூற்றுக்கணக்கான டெம்போக் களிலும், பிக்அப் வாகனங்களிலும் விவசாயிகள் பயணம் மேற்கொண்டனர். மகாராஷ்டிராவின் 21 மாவட்டங்களைச் சேர்ந்த அரை லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் குடியரசு தினத்தன்று மும்பையில் அணிவகுக்க உள்ளார்கள். ராஜ் பவனுக்கு அணிவகுத்து சென்று கோரிக்கை மனுவை ஆளுநரிடம் ஒப்படைத்த பின்னர் ஆசாத் மைதானத்தில் தேசியக் கொடி ஏற்றப்படுகிறது.அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய விவசாயிகள்சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா, என்சிபி தேசியத் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் மாநிலத் தலைவரும் அமைச்சருமான பாலாசாகேப் தோரத், சிவசேனா தலைவரும் அமைச்சருமான ஆதித்யாதாக்கரே ஆகியோர் உரையாற்ற உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் ஏற்கெனவே ஆளுநர் மாளிகை முற்றுகைப்போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில்
தமிழ்நாட்டில் மாவட்டங்களில் டிராக்டர் பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்தபோதும், திட்டமிட்டபடி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அமைதியாக அதேநேரத்தில் எழுச்சியுடன் விவசாயிகளின் டிராக்டர்மற்றும் வாகனப் பேரணி நடைபெற உள்ளது என்று அனைத்து விவசாயசங்கங்கள் சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள் ளார். டிராக்டர் பேரணியை தடுக்கும்வகையில் டிராக்டர் வைத்திருப்ப வர்களை காவல்துறையினர் மிரட்டியபோதும் விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் எழுச்சியுடன் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

;