india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

புதுதில்லி
“பாதுகாப்பற்ற மனநிலையில் பிரதமர் மோடி

கல்லூரிகளில் செல்பி பாய்ண்ட்ஸ் அமைக்குமாறு கூறிய பல்கலைக்  கழக மானியக் குழு புதிய வழி காட்டுதலை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்து கண்ட னம் குவிந்து வரும் நிலையில், காங்கி ரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “நமது  பிரதமர் சுயபடம் எடுப்பதிலேயே மூழ்கி யுள்ளார்” என கூறி கண்டனம் தெரிவித் துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறியதா வது, “நாடாளுமன்ற தேர்தல் வரவுள் ளதை தொடர்ந்து மிகவும் பாதுகாப்பற்ற மனநிலையில் பிரதமர் மோடி இருப்பது தெளிவாக தெரிகிறது. சரிந்து கொண்டி ருக்கும் அவரது பிம்பத்தைக் காப்பாற்று வதற்கு எந்த எல்லைக்கு வேண்டுமானா லும் செல்வதற்கு மோடி தயாராக உள்  ளார். முதலில் ராணுவத்தை செல்பி  பாய்ண்ட் வைக்க சொல்லி கட்டாயப்படுத்  திய நிலையில், தற்போது பல்கலைக் கழக மானியக் குழுவின் மூலம் பல்க லைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில்  செல்பி பாய்ண்ட் அமைக்குமாறு கூறி யுள்ளார். 

இதற்கு முன்பு “சந்திரயான் 3”  நிலவில் இறங்கியபோது நேரலையில் தோன்றி அந்த நிகழ்வு முழுவதையும் ஆக்கிரமிக்க முயற்சித்தார். அனைத்து கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களிலும் இவரது படத்தை அச்சிட்டு வழங்கினார்.  இவையெல்லாம் பிரதமர் மோடியின் பாதுகாப்பின்மை உணர்வு மற்றும் அரு வெறுப்பான பண்புகளுக்கு சில உதார ணங்கள் மட்டுமே. கடந்த 10 ஆண்டு கால  ஆட்சியில் மலிவான வகையில் சுயவிளம்  பரம் தேடிக்கொள்ளும் பிரதமர் மோடி யின் தந்திரங்களால் மக்கள் சோர்வ டைந்துள்ளனர். அவற்றுக்கு பொருத்த மான பதிலை பொதுமக்கள் விரைவில் கொடுப்பார்கள்” என ஜெய்ராம் ரமேஷ்  கூறியுள்ளார்.

புதுதில்லி
திகார் சிறை ஊழியர்கள் 50 பேர் பணிநீக்கம்

நாட்டில் உள்ள முக்கிய சிறை களில் ஒன்றான தில்லி திகார்  சிறையில் பணியாற்றும் 39 காவ லர்கள், 9 உதவி கண்காணிப்பாளர்கள் உட்பட 50 பேரை பணிநீக்கம் செய்வதாக  மாநில அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சிறைத்துறை நிர்வாகம் நோட்டீஸ்  அனுப்பியுள்ளது. ஆனால் அந்த 50 ஊழி யர்கள் யார் என சிறைத்துறை நோட்டீ ஸில் குறிப்பிடவில்லை. 

சமீபத்தில் வாரியம் மூலம் தேர்ந்தெ டுக்கப்பட்ட 450 பணியாளர்களில் 50  பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள் ளது. நோட்டீஸ் பெற்றுள்ள 50 பணி யாளர்கள் வேலை கற்றுக்கொள்ளும் பிரிவில் இரண்டு ஆண்டுகளாக பணி யாற்றி வந்துள்ள நிலையில்,  நோட்டீஸ்  பெற்ற பணியாளர்கள் ஒரு மாதத்தில் பதி லளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.  

சிறைத்துறை அதிகாரிகளின் தக வல் அடிப்படையில் பயோ மெட்ரிக்  தரவுகள் பணியாளர்களுடன் பொருந்தா ததே இந்த பணிநீக்க அறிவிப்புக்குக் காரணம் எனத் தகவல் வெளியாகியுள்  ளது. ஒருவேளை பணியாளர் கள் தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்திருக்க லாம் என சந்தேகம் உருவாகியுள்ளது.

புதிதில்லி
சூரியக்காற்று அளவீடு பணியை தொடங்கிய “ஆதித்யா - எல் 1

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 “லாக்ராஞ்சி யன் பாயின்ட் ஒன்” எனும் பகுதி யில் இந்த விண் கலம் நிலைநிறுத்தப்பட் டுள்ள நிலையில் இதுதொடர்பாக இஸ்ரோ  வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆஸ்  பெக்ஸில் சூரியக் காற்று அயனி களை அறியும் ஸ்பெக்ட்ரோமீட்டர் மற்  றும் ஸ்ட்பெஸ் என இரண்டு கருவிகள்  பொருத்தப்பட் டுள்ளன. ஸ்ட்பெஸ் தனது  பணியை செப்டம்பர் 10 அன்று தொடங்  கிய நிலையில், ஸ்விஸ் கருவி நவம்பர் 2  அன்று தனது வேலையைத் தொடங்கி யது. ஸ்விஸ் கருவி அனுப்பிய ஆதார  தகவலின் அடிப்படையில் ஹிஸ்டோகிரா மின்படி புரோட்டான், ஹீலியம் ஆகியன  சூரியக் காற்றில் இருப்பதாக கூறி யுள்ளது.